Sunday, May 15, 2016

கடவுள் இசைக்கத் துவங்கி 40 ஆண்டுகள்! - Part 2


Cont'd from part 1 - http://itekvijay.blogspot.com/2016/05/40-part-1.html


21. விடாது தென்றல்!






இந்தப்பாடலைப்பற்றி என்ன சொல்ல?!!! இதை அலசும் தகுதி எல்லாம் நமக்கு எப்பவும் இல்லை!(for that matter, all raja songs!) but அப்படின்னா, நமக்கு தோணுவது எதுவுமே சொல்லமுடியாம ஆகிடும். Better to express and then, correct if wrongSo..!


இந்தப்பாடலின் சூழல் முழுக்க Rural Setting இல் அமைந்திருக்கும் ஆனால் இசையோ ஒருமாதிரி முழுக்க மேற்கத்திய செவ்வியல் இசை! அதிலும் ஆரம்ப கோரஸ், if iam right, that's a Fugue! மூன்று கோரஸ் section, one after another, ஒன்றன் பின் ஒன்று என சேர்ந்துகொள்ளும்! 


Below link has 3 fugue examples, 2 from Raja and last one from the famous 'Il est bel et bon' (Pierre Passereau
)

https://soundcloud.com/vijeeth/layer-after-layer




22. நாட்டுப்புறப்பேய்!




ேவை இளம் ேவி’ பாடல், அனைவும்ேட்டிருப்போம்! ஒரு பேய் பாடுவு போன்றந்தப்பாடில், (இன்னும் அுபோன்றாடல்கில்!)
ம்ப்யட்டர் இசை எல்லாம் வாலத்ிலேயே, பேய் Moodஐ உருவாக்க, விிானப்ங்கள் உருவாக்ி சேர்த்ிருப்பார் ராஜா! விட்டாச்சார்யா போல், ஒரு இசை மெட்டாச்சார்யா, நம்மாஜா! 

ந்தேய்ப்பாட்ை, அப்பியே உருமாற்றி, ஒரு கன்னப்பத்ில் ஒரு நாட்டுப்புறாடாக ஒலிக்கத்ிருப்பார் ராஜா! பொதுவாகவே ராஜா இதுபோன்ற reused tuneகளில் percussion தாளம் மற்றும் Interludes இடையிசை முழுவதாக Nativity / சூழலுக்கேற்ப மாற்றிவிடுவார்! Of course lyrics too! எனவே மேல் உள்ள கன்னடப்பாடல் ஒரு புதுப்பாடலாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம்!



23. பீத்தோவனுக்கு மரியாதை!




த்ோவின் MoonLight Sonata(1st Movement) ஆரம்ப இசையை மட்டும் very mild inspirationஆக எடத்ுகொண்டு ராஜா அமத் 3 பாடல்கள் - 
https://twitter.com/tekvijay/status/625757421076508672

ில், மேலுள்ளிலே நீ வேண்டும்” & இந்தப்பின்னி இசை 
https://soundcloud.com/navinmozart/illayaraja-2 ந்த இரண்டுமே நம்மூர் இசான்! அிலும் உன்னெனச்சேன் பாட்டுப்பிச்சேன் BGM, Rural Film. இில், Western Classical "MoonLight Sonata) அாகப் பொரந்துகிறு! எுவுமே “ொடேண்டியங்க ொட்டா, நன்றாக ுலங்ும்!” உபம்- நன்றி நஞ்சில் சர்பத்! 😂😂


24. மேதையின் மனதில் எத்தனை ராகம்?!?!!!!!





 ந்தப்பாடல், இந்துடம் ான் ெலுகில் வந்தத் பம்! பம் ஃப்ளாப் ான் ஆனால் இச, பத்ின் ஒரே ஹைலைட்! ந்தப்பத்ில் எல்லாடுமே, Fresh, Top Class Melody! கிட்டட்ட ‘மேகா’ லெவெல்! ஆனா, இப்பி ஒரு ஹிட் ஆல்பத், நிச்சம் செல்ஃப் எடுக்கு என ெரிந்தே இருக்கும் ெலுகு பத்ுக்கு அள்ளி வழங்கியிருக்கிறார் ராஜா! அதுதான் ராஜா! 

”கலுனு கனலு பிலிசே” இந்த பாட்டில் இந்த ஆரம்ப மெட்டு 2 வரி வரி      மட்டும் கவனியுங்கள்! எனக்கு, விடாமல் ஆச்சர்யம் அளிப்பது இந்த விஷயம் தான்! ஏற்கனவே பல ஆச்சரியங்களை அடைந்தாலும், விடாமல் திரும்பத்திரும்ப, மீண்டும் இன்னொருமுறை ஆச்சரியம் அளிக்க ராஜா தவறுவதே இல்லை! 1000 படங்கள், 5000 பாடல்கள் கணக்கற்ற பின்னணி இசை, இதற்குப்பிறகும் ஒரு கம்போசரால், எப்படி இப்படி, மிக எளிமையான, ஆனால் Fresh புதியதாகவும், கேட்டதும் பிடிக்கும்படியாகவும், ஒரு மெட்டு அமைக்க முடிகிறது?!  


ஒரு கம்போசர், நிறைய இசையை அமைக்க அமைக்க, ஒருகட்டத்தில், ரிப்பிட்டீஷன் நிறய வரும், அதை தவிர்க்க, இயல்பாகவே, ஆரம்ப மெட்டே மிக நீளமாக அமைப்பார்கள்! அப்போது, இயல்பாகவே நிறைய புதிய Permutation & Combinationsக்கு இடம் இருக்கும்! மெட்டும் புதுசாக வரும். இது எல்லா சீனியர் கலைஞர்களும் செய்வது தான்! ஆனால், இருக்கிற 7 சுரங்களில்*, மீண்டும் ஒரு மேற்சொன்னதுபோல் ஒரு புதிய மெட்டு என்பது...... iam wordless! totally blank! As said before, வேற லெவெல்! தெய்வ லெவெல்! simply ராஜா லெவெல்!!


இந்தப்பாடலை ஒரு சிறுவன் பியானோவில் வாசிக்கிறான்! - https://www.youtube.com/watch?v=0OA8s_Lbp5A



7 சுரங்களில்* - If you start the song in "E", the whole tune sits in white keys only. So its well within 7 சுரங்கள், no black notes.



25. மொசார்ட்டின் ஒரே குத்துப்பாட்டு!




கிழக்கு வாசல் படத்தில் வரும் “அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்” பாட்டின் ஆரம்ப வரிகள் மட்டும், Mozart's 25th Symphonyயில் இருந்து எடுக்கப்பட்டது! மேலே, அதை லைவ்வாக வாசித்துகாட்டும் வீடியோ! இதை வாசித்த ராஜா ரசிகருக்கு கோடி வந்தனம்!! 

Mozart WCM இசையை குத்துப்பாட்டாக்குவது, 
Bach Violin sonataவை தமிழிசையாக மாற்றுவது(How to name it),
”தியாகராஜரின் சில கீர்த்தனைகள் அப்படியே குத்துப்பாட்டு தான்!” என்றது - https://www.youtube.com/watch?v=nklYMcGcaGU 
ஒரு தாலாட்டு பாடலுக்கான அழகான மெட்டை ’நிலா அது வானத்து மேலெ’ குத்த்துப்பாட்டு ஆக்கியது!
இதெல்லாம் ராஜாவுக்கு child's play! இனி வருபவர்களும் இது போல செய்யலாம், ஆச்சரியமில்லை, ஆனால் ‘வெத, ராஜா போட்டது’ அதுவும் பலப்பல உதாரணங்களுடன்!

26. A Song in 3 Note! Why Not?!


மூன்றே சுரங்களில் ஒரு முழுப்பாடல் என்பது ராஜா சொன்னாலன்றி தெரியாது! பல்லவி முழுக்க ச ரி க (c d e) மட்டும் தான்! சரணத்துக்கு வெரைட்டி தேவை என்பதால், அடுத்த octaveஇல் உள்ள அதே notes ஐ எடுத்துக்கொண்டு, compose செய்த பாடல்! ராஜா இதற்கு முன்பே, ‘மீன்கொடி தேரில்’ என்ற பாடலின் முதலிரண்டு வரிகளும் 3 சுரங்கள் மட்டுமே கொண்டு இசைத்தார்! 

”வா வா பக்கம் வா” பாடல், இந்த வரிகள் ஒரே note தான்! இதிலாவது இரண்டு octaves பயன்படுத்தியிருக்கிறார்! “அன்பே வா அருகிலே” & “ப்ரேமலேதனி”(தெலுகு) பாடல் ஆரம்பத்தில் பின்னணியில், ஒரே note, ஒரே octave, அதாவது ஒரே ஒரு note மட்டுமே பின்னணியில் பயன்படுத்தி variations காட்டியிருக்கிறார்! 



கீழே - 3 Note song பல்லவியை, காலாலே வாசிக்கும் ரசிகர்!



27. Raja the Oldest Young Man! 





பொதுவாக நாம், 70கள், 80களில் வந்த ராஜாவின் பல பாடல்களையும் Club செய்து, பழைய பாடல்கள் என்றே ஒரே categoryக்குள் வைத்து கேட்கிறோம் ரசிக்கிறோம்! ஆனால் அதில் மேலுள்ள 2 Candidates are very old, date wise! நினைவோ ஒரு பறவை(சிகப்பு ரோஜாக்கள்) 1978. என் இனிய பொன் நிலாவே(மூடுபனி) 1980. இன்னும் சில வருடங்களில் இந்தப்பாடல்களே 40வருடங்களைத் தொட்டுவிடும்! இவை, இன்னும் Fresh songs போல, சூப்பர்சிங்கர் மற்றும் மேடைக்கச்சேரிகளில் இன்றும் பாடப்படுவது, ”பல வருடங்களுக்குப்பின் வரவேண்டிய இசையை முன்னரே கொடுத்துவிட்டார் ராஜா” என்றே சொல்லத்தோன்றுகிறது!

இந்த Categoryயில், இன்னும் சிலபடங்களை, Johny, Guru இவற்றையும் சொல்லலாம்!




28. யானைப்பாட்டு!



இந்தப்பாடலுக்கும் உருகாதவர் எவருமில்லை! இப்பாடலை படமாக்கும்போது யானைகள் கூட்டமாக வந்து, முழுப்பாடலையும் கேட்டுவிட்டு சென்றதாக சொல்வார்கள்! தெரிந்தோ தெரியாமலோ, யானைகளுக்கு, பாட்டின் ஆரம்பத்திலேயே ராஜா ஒரு hook வைத்திருக்கிறார் என அனுமானிக்கிறேன்! 0.18 இல் வரும் Viola / Cello / Double Bass (பெரிய சைஸ் வயலின்) இசை, யானை பிளிறல் போலவே இருக்கிறது! 1.12இல் முதல் இடையிசையில் வரும் ஷெனாய் கூட கொஞ்சம் அந்த தொனியில் இருக்கிறது(again wild guess since its elephant!!)


ஆக, விலங்குகளையும் விட்டுவைக்கலை ராஜ இசை!!



29. விரக கோபம்!




விரகதாப உணர்வுகளுக்கு ராஜாவின் நிறைய பாடல்கள் உள்ளன. ஆனால் விரக தாபத்தை கோபமாக, அதுவும் பரத கோபமாக ஆடியும் பாடியும் காட்டிய ஒரு பாடல் இது. 80களில் படம் வெளிவந்த இறுக்கமான சூழலில் இப்படி ஒரு பாடல்! பாட்டின் அடிநாதத்தில் கோபம் இருந்தாலும், மேலோங்கி தெரிந்தது, ஒரு இறைஞ்சும் தொனியே. சரியாக 1.19இல் இடையிசையில் துவங்கும் ஷெனாய் இசை, இறைஞ்சுதல் தொனியை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தும். பாட்டின் இறுதியில் வரும் ருத்ரதாண்டவ இசை எல்லாம், உச்சம்! வாய்ப்பில்லாமை!


இந்தப்பாட்டும் சரி, மேலுள்ள ‘ராசாத்தி உன்ன” பாட்டும் சரி, இந்த ஆல்பத்தில் உள்ள எல்லா பாடலுமே, ராஜா முன்னரே கம்போஸ் செய்து வைத்திருந்தது! ராஜா தந்த பாடல்கள் சிச்சுவேஷனிலேயே ஒரு கதை இருந்திருக்கும்! அவற்றை பக்காவாகப் பொருத்தி ஒரு கதையாக்கி இருக்கிறார், இயக்குனர் சுந்தர்ராஜன்! 


காலத்தை வென்ற இசையைத்தர தேவையான inspiration, ராஜாவுக்கு உள்ளேயே இருக்கிறது என உணர, இந்தப்படத்தின் இசையை முன்னரே கம்போஸ் செய்துவைத்திருந்தது, ஒரு மிக நல்ல உதாரணம்!



30. வளையோசை கலகலகலவென.....!




இந்தப்பாடலுக்கான மெட்டும் ராஜா முன்னரே கம்போஸ் செய்து வைத்திருந்தது தான்! How to Name it ஆல்பம் பதிவின்போது ப்ரசாத் ஸ்டூடியோவுக்கு வந்த கமல், இந்த மெட்டை கேட்டு மிகவும் பிடித்து, இதை சத்யா படத்துக்கு பயன்படுத்த ராஜாவிடம் கேட்டு வாங்கின ட்யூன் இது! இந்தப்பாடல் பல்லவி சரணம் இடையிசை என, பாடல் முழுக்க Bass Guitar நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்! நல்ல HeadSetஇல் கேட்டால் புலப்படும்!


முழுக்க Instrumental Pieces மட்டுமே கொண்ட How to Name It ஆல்பத்தில், இந்தப்பாடல், முழுக்க Instrument versionஆக எப்படி வந்திருக்கும் என்ற அடங்காத ஆவல் எனக்குண்டு! இந்தப்பாட்டில் உள்ள இடையிசை, ஒரிஜினலில் இருந்ததா அல்லது பாடலுக்காக சேர்த்ததா?! அந்த ஒரிஜினல் "How to Name It" version of this composition ஐ ராஜா வெளியிட்டால் செமயாக இருக்கும்!



31. Raja - I See Only You!!









1) Angel I See Only You! - கவரிமான்(1979)

2) அலைகளே வா - கவிதை மலர்(1982)

இந்த இரண்டு பாடல்களுமே, westernised songs from early raja! In whole of Raja's discography, இவற்றுக்கு மாற்று/similar songs, முன்னும் பின்னும் இல்லை! அந்தமாதிரி நிறைய பாடல்கள் உள்ளன என்றாலும், இவை எனக்கு ever top favourites! I loop them for whole day!

அலைகளே வா பாடல் ஆரம்பத்தில் Beethoven's Moonlight sonata(1st Movement) surfaces! பாடல் முடிவில், ஒரு பிரளயம் போன்ற இசை இருக்கும்! பிற்காலத்தில், Hungary, London Orchestra போன்ற பெரிய லெவெலுக்கு, தன் மேற்கத்திய செவ்வியல் இசையை கொண்டுசெல்வார் என்பதற்கு இந்தப்பாடல்கள் ஒரு Pre Cursor ஆக அமைந்தன!



32. தரை வேண்டாமென்றான்! தலைகீழாய் நின்றான்!






மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் வரும் ‘செல்லக்குழந்தைகளே’ பாடல், கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னை ஒரு குழந்தையாக்கிவிட்டுச் செல்லத்தவறுவதேயில்லை! அவ்வளவு குறும்பு, குசும்பு, உற்சாகம் அனைத்தும் பீறிட்டு (பீர் இல்லாமலேயே!)  கொப்பளிக்கும் இந்த இசையில்! (Not talking about the picturisation which is superb too!) 

குழந்தைகளுக்கான உற்சாகப்பாடல்களும் ராஜா பல அமைத்திருக்கிறார்! ராஜாவின் இசையில் அவையும் ஒரு தனி ஜானர்(Genre) தான்! அஞ்சலி படத்தில் வரும் ‘போகும் போகும் தூரம் தூரம்”, அன்புள்ள ரஜினிகாந்த், நந்தலாலா படங்களில் சில பாடல்கள், இன்னும் நிறைய இருக்கின்றன! இந்தப்படத்திலேயே கூட, “பூவாடைக் காற்றே” அந்த ஜானர் தான்! 


ஆனால் இந்தப்பாடல், இந்த ஜானரில் நிச்சயம் ஒரு உச்சம் தான்! Western Elements, Folk elements, இரண்டுமே கலந்துகட்டி, excitement will touch its peak! இசையில் excitement/உற்சாக உணர்வை கொண்டுவருவது நிச்சயம் ஒரு சவாலான விஷயம். ஆனால் அதை சர்வசாதாரணமாக இதில் செய்திருப்பார்! எனக்கு personally, வாழ்வதே இதுபோன்ற பாடலை கேட்கவும், இந்தப்பாடலைப்போன்ற ஒரு உற்சாக தருணத்துக்காகவும் தான், என தோன்றவைக்கும் பாடல் இது!


பாடல் முழுக்க வரும் வரிகள், சூழலுக்கு பொருந்துவது போக, ராஜா என்ற இசை magicianக்கும் நமக்குமான உறவைப்பற்றியது போலவே இருக்கும்!


காற்றும் இவனுக்கு கட்டுப்படும் இவன் செப்படி வித்தைக்காரன்!

தரை வேண்டாமென்றான்! தலைகீழாய் நின்றான்!
இனி நம் வீட்டிலே இசை தீபாவளி!
இனி நாம் தூங்கவே வெகு நாளாகுமே!
நம் சொந்தம் என்னாளும் மாறாதே!

ஆக மொத்தத்தில், நம் ஒட்டுமொத்த வாழ்வுக்கும்...


ஒரு தோழன் துணைக்கு வந்தான்!



33. கும்மாளம் தான் வா!





Mohan Hits Playlistஇல் தவறாமல் இடம் பிடிக்கும் பாடல் இது! இதில் சரியாக 0.06 நொடியில் துவங்கி பாடல் முழுக்க வரும் இசைக்கருவி - Mandolin! இதில் ஒரு சுவாரசியம், பாடல் பதிவு அன்று Musicians Strike ஆனதால் Violin Strings Section வாசிக்க யாருமில்லை. எனவே, இந்தப்பாட்டில் உள்ள Strings Sectionக்கான இசை Notation அனைத்தையும் Mandolin வைத்து வாசிக்கவைத்து பதிவு செய்துவிட்டார் ராஜா! Mandolin வரும் இடம் அனைத்திலும் Strings Sectionஐ மனதில் கற்பனை செய்தும் ஓட்டிப்பார்க்கலாம்! அதுவும் அருமையாகத்தான் இருந்திருக்கும்!

Musicians Strike, Schedule, Instrument Players Callsheet இப்படி ஏகப்பட்ட Logistical Problems க்கு இடையே தான் இப்பேற்பட்ட அற்புதமான இசையை ராஜா நமக்குத்தந்திருக்கிறார்! பாடம், for this whole generation, not just today's composers... :)


34. வா நெஞ்சமே / வான் வெண்ணிலா / ஓ மீதிலே!




"வான் மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே” என்ற MSV யின் பாடல் https://www.youtube.com/watch?v=_zWU0ELJc1o இந்தப்பாடல் ராஜாவுக்கு மிகவும் பிடித்ததால் தான், பின்னாளில் அதேபோன்ற மெட்டில் மெல்லத்திறந்தது கதவு படத்தில் வரும் ‘வா வெண்ணிலா’ என்ற பாடலை
MSVஇடம் கேட்டு வாங்கினார் ராஜா! ஆனால், இதற்கு முன்னரே, எனக்காக காத்திரு(1981) படத்தில் “ஓ நெஞ்சமே” என்ற பாடலை ராஜா இசையமைத்திருந்தார்! குருவுக்கு ட்ரிப்யூட், ஆனால், ஆரம்ப வரிகள் தவிர மிச்சம் அனைத்துமே ராஜாவின் சொந்த சரக்கு. ஆக, முழுக்க MSV, ராஜா&MSV இரண்டு Combinationஇலும் ஒரு பாடல் என்றால், முழுக்க ராஜா கம்போஸ் செய்து நமக்கு கிடைத்த அருமையான மெலடி தான் இந்த “ஓ நெஞ்சமே!”


35.  உள்ளம் ’தொடு’ இசை!!



புன்னகை மன்னன் படத்தில் வரும் இந்த கம்ப்யூட்டர் feeded Theme Music, ஒரு அக்மார்க் ராஜ முத்திரை கொண்ட இசை! Flute, Piano, Guitar, Synth Instruments என பல இசைக்கருவிகள் கொண்டு கம்போஸ் செய்யப்பட்ட இந்த இசை, காலத்தை வென்றது என்பது நாம் அறிந்ததே! ஆனால், எதிர்காலத்தில், தொடுதிரை கருவிகள்(Touch Screen Devices) வரும், பியானோ கீபோர்ட் போன்ற கருவிகளை அதிலேயே ஓரளவு வாசிக்கலாம் என்பதை மனதில் கொண்டே கம்போஸ் செய்யப்பட்ட Piece இது! 😜

நீங்கள் நம்பவில்லையா?! உங்களிடம் உள்ள iPad, iPhone அல்லது Android Tab, Phone, எதிலாவது ஒரு Musical Keyboard/Piano App ஐ Install செய்யுங்கள்! அதில், இந்த தீம் இசையை வாசித்துப்பாருங்கள்! பெரும்பாலும், நீங்கள் ஒரு Note/Keyயில் விரலை வைத்தால், விரலை எடுக்காமலேயே அடுத்த நோட்டை வாசித்து முழு பாட்டையே வாசித்துவிட முடியும்! ஏனெனில், அருகில், அடுத்தடுத்து உள்ள Notesஐ மட்டுமே பயன்படுத்தி இந்த முழு தீம் பாடலின் மெட்டும் இருப்பது போல் கம்போஸ் செய்யப்பட்டுள்ளதே இதற்கு காரணம்! அதே சமயம், இதனால், தீம் இசையை வாசிக்கவும் எளிதாக இருக்கும்! 

36. மாலை நேரக்காற்று



 மேற்கத்திய இசையில் Bach 15ஆம் நூற்றாண்டில் இசைத்ததில், "Air Suite" மிகப்பிரலமான ஒரு இசைக்கட்டு ( https://www.youtube.com/watch?v=rrVDATvUitA ) இது, சந்தோஷமான இசை. இதன் ஆரம்ப பகுதியை மட்டும் எடுத்து, சோக இசையாக மாற்றி, மேலுள்ள ‘மாலை நேரக்காற்றே” என்ற பாடலை கம்போஸ் செய்துள்ளார் ராஜா! Raja's Bach Love Continues! And its pure Genius, again!


37. கிராமிய ராப்!

அம்மணிக்கி அடங்கி போச்சுதா - ராஜாவின் பார்வையிலே

மேற்கண்ட பாடல், ராஜாவின் பார்வையிலே என்ற விஜய் படத்துக்காக கம்போஸ் செய்து வடிவேல் பாடிய பாட்டு. ஆனால் படத்தில் வராது. வடிவேல், “டீச்சர்ர்ர்” என பாசத்துடன் அழைக்கும் படம் தான் இது! இதில், அவரின் குரல் சற்று உடையாமல் Tender Voice போல இருக்கும்! இப்போது வடிவேலால் இதுமாதிரி பாடமுடியாது! ஆனால் இதில் அற்புதமாகப் பாடியிருப்பார்!

கிராமிய சூழலில் அமைந்த இந்தப்பாட்டின் சரணம் முழுதும், ராப் வகை இசையில் இருக்கும்! வடிவேலை ராப் பாட வைத்திருக்கிறார் ராஜா! இதுபோல், முழு சரணமும் ராப் இசையில் அமைந்த பாடல்கள் தமிழில் வேறெதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை! 

1995இல் வந்த இந்தப்படப்பாட்டில் பல்லவியில் வரும் வரி 
”அந்தநாளில் கொந்தளிச்ச ஆரவல்லி சூரவல்லி எங்க போனா”
“ஆம்பளைய ஆட்டிவெச்ச அல்லிராணி சண்டிராணி ஆனா” 

இந்த வரிகள் 2003இல் வந்த தூள் பட பாடல்
“கண்ணுக்குள்ள கெளுத்தி வெச்சிருக்கா ஒருத்தி” யை நினைவுபடுத்தினால், நான் பொறுப்பில்லை! 😂


38. மனித இசைக்கருவிகள்! 





ராஜாவின் இசையில் பாடும் பின்னணிப்பாடகர்களே கூட, சில சமயம் ‘மனித இசைக்கருவிகள்” போலத்தான் பயன்படுத்தப்படுவார்கள்! A Singer is basically a very sophisticated Musical Instrument! அது வேறு!(For ex, வானிலே தேனிலா 2nd Interlude) 

ஆனால், மேலுள்ள பாடல்கள் இரண்டிலும் இசைக்கருவிகளே இல்லாமல் மனித கோரஸ் குரல்களே பயன்படுத்தப்பட்டிருக்கும்! முதல் பாடல் “தாம்த தீம்த” ஜானகி பாடும் இந்தப்பாடல் 1979இல் ‘பகலில் ஒரு இரவு’ படத்துக்காக! அடுத்த பாடல் மாயாபஜார் என்ற 1995 படத்துக்காக! இந்தப்பாடல் முன்னதை விட அதிக Sophisticated ஆக இருக்கும்! ஆனால் முதல் பாடல்(தாம்த தீம்த) 1979 வருடத்துக்கு Sophisticated தான்!


39. Choral குரல் Harmony!



Harmony என்பது,  ஒரு மெட்டுடன், கூடவே சேர்ந்து ஒரே நேரத்தில் parallel ஆக, மற்ற இரண்டு மெட்டுக்கள், சற்றே மாற்றிப்பாடுவது. இந்த சிக்கலான Concept ராஜா, பல்வேறுவிதமாக அடித்து துவைத்துப்போட்ட ஒன்று தான்! ஆனால் இந்தப்பாடல், ‘வா வா மஞ்சள் மலரே” பாடல் முழுக்க மனோ & SP ஷைலஜா, Harmonyயிலேயே பாடுவார்கள்! 

அதாவது, ஒரு மனோவுடன் சேர்ந்து Parallelஆக, இன்னும் இரண்டு மனோக்கள், மெயின் மெலடியை மெயின் மனோ பாட, கூடவே மற்ற இரண்டு மனோக்களும், மெயின் மெலடியிலிருந்து சற்றே மாற்றி, அதாவது For ex, ஒரு மனோ மேல் Note இலும், இன்னொரு மனோ கீழ் Noteஇலும் கூடவே Parallel ஆக பாடுவார்கள்! இது நிஜத்தில் சாத்தியமில்லை என்பதால், முதலில் மெயின் மனோ மெயின் மெலடியைப்பாடி பதிவு செய்து முடித்த பின், மற்ற இரண்டு மனோக்களும், தத்தம் போர்ஷன்களை respectively இரண்டு முறை பாடி, ஆக மொத்தம் மூன்று மனோக்கள் பாடுவதையும் final output இல் பதிவு செய்து, பின்னர், இதேபோல் ஷைலஜாவும் பாடி அதை செய்து, அதைத்தான் மேலுள்ள பாடலாக நாம் கேட்கிறோம்! உஸ்ஸ்ஸ், இதை புரிந்துகொள்வதற்கு, பேசாமல் பாடலை 10 முறை கேட்டால் தன்னால் புரிந்துவிடும்! கூடவே, இந்த Conceptஇல் கம்போஸ் செய்வது, அதை பாடி பதிவு செய்வதும் எவ்வளவு சிக்கலானது, ஆனால், கடைசியில் பாடல், அதிலுள்ள Vocal Harmony, கேட்பதற்கு எவ்வளவு இனிமையானது என்பதும் புரியவரும்!

இதே Vocal Harmonyயில், ராஜாவே பாடிய பாடல் - ராஜா ராஜாதி ராஜனிந்த..
Instrumental Harmonyயில் ராஜா கணக்கேயின்றி சிரிதும் பெரிதுமாக நிறைய்ய்ய செய்திருக்கிறார்!


40. அன்னக்கிளிக்கும் முன்பாக...!



ஒருவழியாக, 40ஆவது பாடலுக்கு வந்துவிட்டோம்!!! இந்தப்படம் அன்னக்கிளி படத்துக்கு முன்பே வந்த படம், இசை GK Venkatesh, ராஜா இவரிடம் தான் நிறைய படங்களுக்கு இசை உதவியாளராக பணியாற்றினார்! ஆனால், இந்தப்பாடல் முழுக்க ராஜா கம்போஸ் செய்தது! இதிலேயே ராஜாவின் Signature elements பலதையும் கேட்கலாம்! “கங்கை நதி ஓரம்” என்ற மூன்று வார்த்தைகளுக்குள்ளேயே, ஒரு சின்ன Bass Guitar Notes இருக்கும்! இன்னும் பல ராஜமுத்திரைகள், அவரின் திறமைக்கு ஒரு Pre Cursor ஆக அமைந்த பாடல் இது!

------------------------------------------------------------------------------------------

முடிவுரை! :- இத்துடன், ராஜா இசையில், என் ‘இனியவை 40” பட்டியல் முடிகிறது! 5000 பாடல்கள், 2000+ BGMஇல் 40 எந்த மூலைக்கு! ஆனால், நிறைய நேரம் இல்லாமல், திடீரென எழுதிய பதிவு இது! இதில் உள்ள பிழைகள்,  இசை/தகவல்/எழுத்துப்பிழைகள் எதுவாகினும் சுட்டவும்! மாற்றுகிறேன்! மிக்க நன்றி! 

1 comment:

  1. Slot Machines - Jtm Hub
    Slot Machines 안성 출장마사지 · Video Poker 광주 출장샵 · Sports 동두천 출장마사지 Betting · Golf Betting · Golf Betting · Casino Gaming · Sportsbook · Slot Machine 정읍 출장샵 Games · Virtual Reality 계룡 출장마사지 (VR).

    ReplyDelete